முச்சக்கர வண்டி மீது கவிழ்ந்த கொள்கலன் பாரவூர்தி

கொழும்பு – ஒருகொடவத்தயில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கொள்கலன் பாரவூர்தி முச்சக்கர வண்டியின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஒருகொடவத்த நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் மீது கவிழ்ந்த நிலையில் முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.