முக்கிய பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்பு!

நாட்டில் சீமெந்து, டைல்ஸ் மற்றும் பெயின்ட் போன்ற பொருட்களின் விலையை குறைப்பு தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த பொருட்களின் சந்தை விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதுடன் அதற்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்