
மீன்பிடி துறைமுகத்திற்கு அருகிலிருந்து சடலம் மீட்பு
கொழும்பு தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் இன்று ஞாயிற்று கிழமை காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ரன்ன தலுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
