மீண்டும் திரைக்கு வரும் தனுஷின் அம்பிகாபதி!

ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ்,சோனம் கபூர் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் அம்பிகாபதி .

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம்மூலம் தனுஷ் ஹிந்தியில் அறிமுகமாகினார்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞனின் ஒருதலைக்காதலைச் சொல்லும் கதையை கொண்ட இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியானது.

இது வெற்றி திரைப்படமாக அமையாவிட்டாலும், மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் அம்பிகாபதி திரைப்படத்தை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மீண்டும் திரையிடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.