
மிஹிந்தலையில் பெண்களின் அதிரடிப் போராட்டம்!
மிஹிந்தலை பிரதான வீதியை மறித்து இன்று செவ்வாய்க்கிழமை பெண்கள் குழுவொன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் சட்டவிரோத மதுபானத்தினால் இதுவரை 10 ஆண்கள் உயிரிழந்துள்ளனர், 5 பேர் கடும் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
கஷ்டப்பட்டு உழைக்கும் பணம் மதுபானத்திற்கே செலவழிக்கப்படுவதால் குடும்பங்கள் சீரழிவதாகவும், பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோத மது வியாபாரிகளிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு மிஹிந்தலை காவல்துறை அதிகாரிகள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாக போராட்டக்காரர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
