மின்னல் தாக்குதலால் பலத்த சேதம்

-மஸ்கெலியா நிருபர் –
நோர்வூட்டில் பெய்த கனமழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்குதலால் நோர்வூட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டொல்பின் வேன் மற்றும் அருகிலுள்ள வீடு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

வீட்டில் இருந்த ஒருவர் அதிர்ச்சியில் விழுந்து காயமடைந்து, டிக்கோயா கிளங்கன் அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வேன் நிறுத்தும் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பெரிய மரத்தில் நேற்று புதன்கிழமை மாலை 5:00 மணியளவில் மின்னல் தாக்கியதாகவும், பின்னர் மின்னல் வேன் மற்றும் வீட்டின் மீது தாக்கியதாகவும் நோர்வூட் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.

மின்னல் தாக்கத்தால் நோர்வூட் பகுதியில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டது.