மின்னல் தாக்கி நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
அனுதாபுரம் – அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குறித்த நால்வரும் சிகிச்சைக்காக அனுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்