
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அடுத்த சில மணி நேரங்களுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான, அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக, மாலை வேளையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்