மின் கட்டணத்திற்கு நிவாரணம்?
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே விற்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு தொகை நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான பசுமை நிதி வசதிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் மின்சார சபையினை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்