மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி – 2023
மங்கிக்கட்டு கதிரவன் விளையாட்டு கழகம் தனது 48 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு – அம்பாறை அணிகளுக்கிடையிலான மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போடடடி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
இப் போட்டியானது நேற்று சனிக்கிழமை கதிரவன் விளையாட்டு கழக மைதானத்தில் இரவு பகல் போட்டியாக இடம் பெற்றது. இது அணிக்கு நான்கு பேர் கொண்ட போட்டியாகவிருந்தது.
இதில் மங்கிக்கட்டு கதிரவன் விளையாட்டு கழக உறுப்பினரும் ஆசிரியருமான அமரத்துவம் அடைந்த பாலசிங்கம் ரவீந்திரராஜா ஞாபகார்த்தமாக இந்த போட்டி தலைவர் வ.சுவின்சோன் தலைமையில் ஏற்றப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் , வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , மங்கிகட்டு பாடசாலையினுடைய அதிபர் மங்கிகட்டு கிராமத்தில் உள்ள சமூக மட்ட அமைப்புக்கள் , மங்கிகட்டு பொதுமக்கள் என பலர் ஒன்றிணைந்து சிறப்பித்திருந்தனர்.
இப்போட்டியானது நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முடிவடைந்தது. இதில் 1ம் இடத்தினை பிறதீஸ்வரன் அணியினரும் இ 2ம் இடத்தினை நாவற்காடு பாரத் அணியினரும்இ3ம் மற்றும் 4ம் இடத்தினை மங்கிகட்டு கதிரவன் அணியினரும் பெற்றுக் கொண’டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்