மாணவியின் உயிரைப் பறித்த மாத்திரைகள்

கொழும்பில் சுகவீனம் காரணமாக வீட்டில் இருந்த இரண்டு மாத்திரைகளை உட்கொண்டதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்தனர்.

பலப்பிட்டிய, மருதானை பிரதேசத்தை சேர்ந்த வலிமுனி தினுஜி (வயது – 13) என்கிற பலப்பிட்டிய ரேவத கல்லூரி மாணவியே உயிரிழந்துள்ளார்.

திடீரென சுகவீனமுற்றதனால் வீட்டிலிருந்த மாத்திரைகளில் இரண்டை எடுத்து உட்கொண்டதாலேயே மாணவி உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மாணவியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

</ul