
மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கி வைத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புத்தகப்பையினை வழங்கி வைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மன்னார் முருங்கன் தேசிய பாடசாலையில் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த ஆயிரம் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் முதல் கட்டமாக 250 மாணவர்களுக்கு குறித்த புத்தகப் பை வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் போது இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களின் சேவையை பாராட்டி பிரதி அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்,வலயக்கல்வி பணிப்பாளர்கள்,திணைக்கள தலைவர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



