மாணவர்களுக்கான விவாத மேடை நிகழ்வு!
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் “உலகை அறிவோம் – விவாத மேடை” நிகழ்வானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் திரு சி. உருத்திரராஜா மற்றும் ஆசிரியர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த விவாத நிகழ்வில், “இலங்கையின் கலாசாரம் ஏற்புடையது மற்றும் ஏற்புடையதல்ல ” எனும் தலைப்பில் மாணவர்கள் தங்கள் வாதங்களை மிகவும் சிறப்பான முறையில் முன்வைத்திருந்தனர்.
இவ் விவாத நிகழ்வானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 5 பாடசாலைகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெறும் இவ் விவாத நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி. சத்யகெளரி தரணிதரன், உதவி அதிபர் திருமதி சு. புவிச்சந்திரன், ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வுகளை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒழுங்கு செய்திருந்ததுடன், பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.