மாணவர்களுக்கான பொதுப் பாதுகாப்பு மற்றும் உளவள ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு
நாட்டில் பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய குற்றச் செயல்கள், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்தான போதை பாவனை மற்றும் வியாபாரம் போன்ற விடயங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனால், மாணவர்களின் பொது பாதுகாப்பு மற்றும் கல்வி எதிர்காலம் குறித்து அதிகளவான அச்சம் தோன்றியுள்ள நிலையில், பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, ஆபத்தான சூழ்நிலையில் உள்ள மாணவர்களை இனங்கண்டு அவற்றிலிருந்து மீட்டு ஆரோக்கியமான பாடசாலை சூழலை உருவாக்கும் நோக்கில் மாணவர்களுக்கான “உளவள ஆலோசனை மற்றும் பொதுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இத்தொடரில், இறக்காமம் பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வு, கமு/சது/அல்-அமீன் மகாவித்தியாலயத்தில் கல்லூரி முதல்வர் எஸ்.எல். கலந்தர் லெப்பை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் பொதுப் பாதுகாப்பு மற்றும் சிவில் சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளை பேணுவதன் அவசியம் குறித்த தெளிவுரை பொது மக்கள் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் டி.எச். அலக்ஷான்டர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.டி. கடாபி ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை சூழலில் மேல்நிலை மாணவர்களின் முன்மாதிரி மிக்க நடத்தை மற்றும் உளப்பாங்கு மாற்றத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.மேலும்,
இந்நிகழ்வில், பொது மக்கள் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எல். பாஹிர் அவர்களும் கலந்து கொ
ண்டார்.