மாணவர் அடைவு மட்டத்தை அதிகரிக்க கணித முகாம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கணித முகாம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் பி.திவிதரன் கலந்து கொண்டார். அத்துடன் கணிதபாட உதவிக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.அன்னநவபாரதி, கே.திருச்செல்வம், பிரதி அதிபர்களான சண்முகநாதன், இராதகிருஸ்ணன், கணிதபாட ஆசிரியர் துஸ்யந்தன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கணிதபாட அடைவு மட்டத்தினை செயற்பாட்டினூடாக அதிகரிப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. இதற்கமைய ஒரு நாள் செயலமர்வாக இவ் கணித முகாம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

-கல்முனை  நிருபர்-

செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்

எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்

JOIN WHATSAPP GROUP