மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் பலி
கண்டியில் வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
பூவெலிக்கடை சங்கமித்த மாவத்தையைச் சேர்ந்த சந்திரிக சம்பத் ரொட்ரிகோ (வயது – 41) என்ற தந்தையும், விமந்த ரொட்ரிகோ (வயது – 10) என்ற அவரது மகனுமே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பயணித்த ஜீப் ரக வாகனத்தில் நேற்று செவ்வாய்கிழமை தந்தை மற்றும் மகன் இருவரும் வீதியைக் கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று புதன்கிழமை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்