மஸ்கெலியாவில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா நகரில் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மஸ்கெலியா நகரில் எங்கு பார்த்தாலும் குரங்கு.
நகரில் குரங்கு அதிகரித்து உள்ளதால் வர்த்தக நிலையங்களில் உள்ள வாழைப்பழம், ஏனைய காய்கறிகள், பிஸ்கட் பக்கட்டுகள், போன்ற வற்றை எடுத்து செல்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வீட்டு தோட்டத்தில் உள்ள அனைத்து காய்கறிகளையும் பரித்து கொண்டு செல்வதால் வீட்டு தோட்டம் செய்ய முடியாது உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
இப் பகுதியில் உள்ள அனைத்து குரங்குகளையும் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும்.
