
மஸ்கெலியா பிரதான வீதி தாழிறக்கம்: வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
நோர்ட்டன் பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை கிரிவன் எலிய பத்தனை பிரதேசத்திற்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதாக நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகள் வாகனங்களை ஓட்டும் போது வீதியின் அணைக்கட்டு பகுதிக்கு அருகில் வாகனங்களை செலுத்த வேண்டாம் என நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், வீதியின் பல இடங்களில் மண்சரிவு மற்றும் வீதி இடிந்து விழும் அபாயம் உள்ளதால், வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
