
மலையக ரயில் சேவை பாதிப்பு
கொட்டகலை மற்றும் ஹட்டன் இடையில் ரயில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் சேவை பாதிகப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக கடந்த 24 திகதி முதல் 29 திகதி வரை 6 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலை ரயில்வே திணைக்களம் வழங்கியுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இன்று ஞாயிற்று கிழமை கொழும்பு திரும்பும் வேளையில் மாலை 05 மணியளவில் கொட்டகலை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பெட்டியொன்றின் மூன்று சக்கரங்கள் உடைந்தன.
இதன் காரணமாக மலையக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
