மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு
மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இந்த விலைகுறைப்பின் இறுதி முடிவுகள் தொடர்பில் திறைசேறி அலுவலர்களுடன் கலந்துரையாடி உள்ளோம் எனவும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதால் விலைகள் குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்