
மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் திறந்து வைப்பு
மன்னார் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள நீச்சல் குளம் இன்று வெள்ளிக்கிழமை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் அதிகாரப்பூர்வமாக விளையாட்டு வீரர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச செயலகத்திற்குள் உள்ள நருவில் குளத்தில் அமைந்துள்ள இந்த வசதி, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மூலம் ஒதுக்கப்பட்ட ரூ. 94 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.
இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகளின் விளையாட்டுத் தேவைகளை அடையாளம் காண இந்த ஆண்டு ஜனவரி மாதம் மன்னாருக்குச் சென்றதாகவும், ஒரு வருடத்திற்குள் விளையாட்டு வளாகத்தை நிறுவுவதாக உறுதியளித்ததாகவும் கூறினார். ‘இன்று, நாங்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம்,’ என்று இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே இதன்போது தெரிவித்துள்ளார்.
முந்தைய அரசாங்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு மட்டுப்படுத்தப்பட்ட கவனம் செலுத்தியதாகவும், ஆனால் தற்போதைய நிர்வாகம் இந்தப் பிராந்தியங்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.