மன்னார் தபாலக உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு
-மன்னார் நிருபர்-
நுவரேலியா தபாலகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை தொடக்கம் நாளை வியாழக்கிழமை வரை அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மன்னார் தபாலக ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளில் இருந்து ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளைய தினமும் கடமைகளை மேற்கொள்ளாது எதிர்ப்பை வெளிப்படுத்த உள்ளனர்.
மிகவும் பழமையும் பாரம் பரியம் நிறைந்த நுவரெலியா தபாலக கட்டிடத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த தபால் சங்க ஊழியர்கள் மன்னார் மாவட்ட மாத்திரம் இல்லாமல் இலங்கை முழுவதும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் பல்வேறு செயல்பாடுகளை நிறைவேற்ற தபாலகம் வருகை தந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்