மனைவி, பிள்ளையுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர் சுட்டுக்கொலை

ஹம்பாந்தோட்டை சுச்சி கிராமத்தில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹக்மன கொடிதுவக்குகே சாகர (வயது – 35) என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மனைவி மற்றும் பிள்ளையுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொலைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிணையில் வெளியில் வந்தவரென தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்