மதுபானசாலையில் துப்பாக்கிச்சூடு : 15 பேர் பலி
தென் ஆபிரிக்காவின் சோவெற்றோவில் உள்ள மதுபானசாலையில் துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் எனவும், அவர்களின் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று காலை குறிப்பிட்ட மதுபான சாலைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதன் பின்னர் வாகனம் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும், துப்பாக்கிதாரிகள் குறித்த அடையாளம் எதுவும் தெரியாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.