
மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கும் நேரத்தை நீடிக்க தீர்மானம்
நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்திருக்கப்படும் நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இதன்படி, தற்போது இரவு 9 மணி வரை திறந்திருக்கும் மதுபான விற்பனை நிலையங்களை இரவு 10 மணி வரை திறந்துவைக்க அனுமதிக்கப்படும் எனவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீதம் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கையினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
