மதுபான தன்சல் வழங்கிய ஆறு இளைஞர்கள் கைது!

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பொசன் பௌர்ணமி தினத்தன்று மதுபான தன்சல் வழங்கி அதன் வீடியோவை ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியை சேர்ந்த  20 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆறு சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் போது, ​​இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மது போத்தல்களில் தேநீர் ஊற்றியதாகவும், டிக்டோக் பிரபல்யத்துக்காக இந்த செயலை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும், குறித்த ஆறு நபர்களையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்