மது அருந்தி விட்டு அநாகரீகமாக செயற்பட்ட 2 சிறுமிகள் உட்பட அறுவர் கைது

பாணந்துறை பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் வைத்து மது அருந்தி விட்டு அநாகரீகமாக நடந்து கொண்ட 2 சிறுமிகள் உட்பட 6 பேரை பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யதுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சிறுமிகள், ஒரு ஆண், ஒரு இளம் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை மது அருந்திவிட்டு அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்களிடமிருந்து பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்