மண்டூர் மீனவர் சங்க குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியனின் முன்மொழிவுக்கமைய மண்டூர் தம்பலவத்தை கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்க குடும்பங்களுக்கு வாழ்வாதார பொருட்கள் இன்று புதன்கிழமை தம்பலவத்தை மீனவர் சங்க கட்டடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர் வேணுகா கலந்து கொண்டார்.

இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுக்கு இந்த வாழ்வாதார , உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.