மணலை வீதியில் கொட்டி விட்டு சென்ற மணல் கடத்தல்காரர்கள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை டிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பரில் மணல் கடத்தப்பட்ட போது பொலிஸார் வாகனத்தை மறித்துள்ளனர். இதனையடுத்து டிப்பரில் மணலை கடத்தியவர்கள் தப்பித்தோடியதுடன் வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றனர்.
இதன் காரணமாக வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியால் பயணிப்பவர்கள் வீதியோரமாக தமது போக்குவரத்தை மேற்கொள்வதற்காக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்