களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து வெள்ள நீர் செல்வதனால் உழவு இயந்திரம் முலம் பொதுமக்கள் அச்சத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தில் மூழ்கிய களுவாஞ்சிக்குடி வெல்லாவெளி பிரதான வீதியினூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை முதல் வெல்லாவெளிப்பிரதேச சபை ஊழியர்கள் , உழவு இயந்திரம் மூலம் பாதுகாப்பாக பொதுமக்கள் அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது சம்பவ இடத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் வருகை தந்திருந்தார்.




