மட்டு. வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி
மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை காலை “செயற்பட்டு மகிழ்வோம்” என்ற தலைப்பில் மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களின் செயற் திறனை அதிகரிக்கும் நோக்குடன் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்களை குழுவாக ஒழுங்கு செய்து விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
அதன்படி, ஸ்கிப்பிங், கட்டம் விட்டு கட்டம் பாய்தல், தடைதாண்டுதல், ஓட்டம் மற்றும் தூரம் பாய்தல் போன்ற விளையாட்டு போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்கள் ஒன்லைன் மூலமான கல்வி செயற்பாடுகளினால் உள மற்றும் உடல் ரீதியாக தாக்கங்களை சந்தித்துள்ளதாகவும் இவற்றை நிவர்த்தி செய்யும் பொறுட்டு இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்