மட்டு.வந்தாறுமூலை பிரதான வீதியில் சற்றுமுன்னர் விபத்து!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் சற்றுமுன்னர் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.

வந்தாறுமூலை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, வந்தாறுமூலை வீ.சி வீதிக்கு செல்ல முற்பட்ட போது, பின்னால் வேகமாக வந்த சிறியரக டிப்பர் ஒன்று முச்சக்கரவண்டியில் மோதுண்டதால், முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி வந்தாறுமூலை பொதுநூலக மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில், டிப்பர் சாரதி தெய்வதீனமாக உயிர் தப்பியமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.