மட்டு.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிச்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய பிரிவுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கணேசமூர்த்தி கலாரஞ்ஜினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியகலாநிதி அசேல குணவர்த்தன கலந்து கொண்டு புதிய பிரிவுகளை திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வுகளில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்