மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: வழக்கு விசாரணை
மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அன்றையதினம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீரப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 31 பேருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு, இன்று புதன் கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஜூன் மாதம் 18ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்