மட்டு. கல்லடியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து வயோதிபப் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி புதிய முகத்துவார வீதி சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான றோசம்மா ஞானப்பிரகாசம் (வயது-76) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் தனது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மாதம் வெளிநாட்டில் உள்ள சகோதரியை பார்ப்பதற்காக தாயாரை தனிமையில் விட்டு சென்றதாகவும், சம்பவ தினத்தன்று நாடு திரும்பிய மகள் வீட்டுக்கு சென்று தாயாரை அழைத்த போது வீட்டின் உட்பகுதியில் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து வீட்டின் கதவினை உடைத்து உட்சென்று பார்த்த போது வீட்டினுள் உள்ள மலசல கூடத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்