மட்டக்களப்பு-மகோ புகையிரத நேரம் மாற்றம்!
தினமும் காலை 11.15 இற்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி வரை பயணிக்கும் பயணிகள்,பொதிகள் புகையிரதமானது (mixed train – 6891) 01.06.2024 சனிக்கிழமை தொடக்கம் மட்டக்களப்பிலிருந்து காலை 09.00 மணிக்கு புறப்படும், என மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராசா அறிவித்துள்ளார்
நேர அட்டவணை
மட்டக்களப்பு – 09.00 மணி
ஏறாவூர் – 09.15
வாழைச்சேனை – 09.45
புனானை- 10.15
ரிதிதென்ன- 10.20
வெலிகந்தை- 10.40
மன்னம்பிட்டி- 11.25
பொலன்னறுவை – 11.45
ஹிங்குராகொட- 12.20
கல்லோயா சந்தி -13.00
கல்லோயா சந்தி வரை பயணித்து, திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பகல் 12.15 இற்கு புறப்படும் புகையிரதமானது, கல்லோயா சந்திக்கு 02.15pm வருகைதரும்.
கொழும்பு செல்லும் பிரயாணிகள் இப் புகையிரதத்தில் பயணத்தை மேற்கொள்ளமுடியும் என்பதுடன், கல்லோயா வரை சாதாரண வகுப்பில் பயணித்து (economic class) கல்லோயா தொடக்கம் கொழும்புக்கு முன் ஆசனப் பதிவுகளை ஒதுக்கிக் கொள்ள முடியும், என மட்டக்களப்பு பிரதான புகையிரத நிலைய அதிபர் அ.பேரின்பராசா அறிவித்துள்ளார்
கிடைக்கக் கூடிய ஆசனப் பதிவுகள்
Air-conditioned first class – AFC
Second class reserved seat – SCR
Third class reserved seat – TCR
economic class
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்