மட்டக்களப்பு – புகையிரத சந்தி வீதியில் விபத்து: பெண் படுகாயம்

மட்டக்களப்பில் எரிபொருள் பவுசர் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த எரிபொருள் பவுசர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பெண் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் எரிபொருள் பவுசரை அவ்விடத்தில் இருந்து அகற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.