மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் அங்குராப்பண நிகழ்விற்கு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு, நூலகர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது வருகை அதிதிகள் உள்ளிட்ட குழுவினர் ஓவியக் கண்காட்சியை பார்வையிட்டனர்