மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இயங்கி வந்த கடைத்தொகுதி உடைத்து சேதம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பெண் முயற்சியாளர்களால் நடாத்தி வரப்பட்ட கடைத்தொகுதி (Bridge Market) இன்றையதினம் சனிக்கிழமை (நள்ளிரவு) சேதமாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கல்லடி பாலம் என்று அனைவராலும் அறியப்பட்ட குறித்த பாலமானது தற்போது உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்ற ஒரு இடமாக மாறி வருகின்றது.
இதேவேளை குறித்த பாலம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள திறந்த கடை தொகுதியில் (Bridge Market) பெண் முயற்சியாளர்களினால் சிறிய அளவில் இயற்கை முறையில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறி வகைகள் மற்றும் விவசாய பொருட்கள் என்பன விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் காலை 7 மணியளவில் குறித்த பெண் முயற்சியாளர்கள் வருகை தந்த போது குறித்த கடைத்தொகுதி உடைக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளரா என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்