மட்டக்களப்பு – கருவேப்பங்கேணியில் தமிழரசு கட்சியின் அலுவலகம் திறப்பு
மட்டக்களப்பு – கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் ஆகிய கிராமங்களை ஒன்றிணைக்கும் ஆறாம் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழரசு கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்துகொண்டு நேற்று மாலை 5 மணி அளவில் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதன்போது தமிழரசு கட்சியின் வேட்பாளர்களான தனுஷபிரதீப் மற்றும் தோமஸ் கந்தையா, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
&மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்