மட்டக்களப்பில் மிளகாய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு!
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை பிரதேசத்தில் பச்சை மிளகாய்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக மிளகாய் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதிகளவிலான முதலீடுகளை இட்டு தங்களால் செய்கை பண்ணப்பட்ட பச்சை மிளகாய்களின் மொத்த விலைகள் குறைவடைந்துள்ளதாகவும் தங்களிடம் மொத்த வியாபாரிகள் ஒரு கிலோகிராமை 90 ரூபா முதல் 100 ரூபாவிற்கு பெற்றுச் சென்று அவர்கள் விற்பனை செய்வதாகவும், தாங்கள் செய்கைக்காக இட்ட முதலீடுகளை இந்த விலைகள் குறைவடைந்ததனால் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
களுதாவளைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் செயற்படாமையே இதற்கான காரணம் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தங்களின் பச்சை மிளகாய்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
க.கிருபாகரன்
மட்டக்களப்பு நிருபர்
14.07.2023
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்