மட்டக்களப்பில் நெற்கதிர்களில் ஏற்பட்டுள்ள நோய் தொடர்பாக ஆராய நிபுணர்கள் வருகை!

 

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளில் சிறுபோக வேளாண்மை அறுவடை இடம்பெறவுள்ள நிலையில், நெற்கதிர்கள் கறுப்பு நிறப் பதராக காணப்படுகின்றது.

இதனை ஆராய்வதற்காக பத்தலகொட விவசாய ஆராய்ச்சி நிலையத்திலிருந்து குழு ஒன்று விஜயம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

அதன் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி மற்றும் பழுகாமம் ஆகிய கமநல அபிவிருத்திப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட வேளாண்மைகளை சென்று பார்வையிட்டதுடன், மாதிரிகளும் எடுத்துச் செல்லப்பட்டது.

இதன்போது இத்தாக்கமானது அதிக வெப்பம் காரணமாக வந்திருக்கலாம் எனவும், பாதிப்புக்குள்ளான நெல்லை விதை நெல்லுக்குப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகளினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.