மட்டக்களப்பில் அமைதியான முறையில் தொடங்கியது க.பொ.த சாதாரணதரப் பரீட்சை!
-மட்டக்களப்பு நிருபர்-
நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அமைதியான முறையில் பங்குபற்றியதைக் காண முடிந்தது.
இதற்கமைய மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா மற்றும் பட்டிருப்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது தாய், தந்தையருடன் வருகை தந்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள் பரீட்சை ஆரம்பமாவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே வருகை தந்திருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்