மட்டக்களப்பில் 5 பெண் பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு
-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதிப் பகுதியில் ஆற்றில் மூழ்கி ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
5 பெண் பிள்ளைகளின் தந்தையான பூபாலப்பிள்ளை யோகநாதன் (62 வயது) என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை ) இரவு தனியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றிற்கு சென்று வலையினை இட்டு விட்டு மீண்டும் அந்த வலையினை எடுப்பதற்காக அதிகாலை சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவர் வலையினை எடுத்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் ஏற்பட்டு ஆற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இறந்த நபருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்ததாகவும் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் வலிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.
இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்