மடகஸ்கார் ஜனாதிபதியை பதவி நீக்க நாடளுமன்றம் வாக்களிப்பு!

 

மடகாஸ்கரில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினாவை (Andry Rajoelina) பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நிறைவேற்றினர்.

இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் 130 பேர் இத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஆனால் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தேசிய சபை கலைக்கப்பட்ட பின் நடைபெற்ற இந்தக் கூட்டம் அரசியல் அமைப்புக்கு முரணானது எனவும், அதில் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானங்களும் செல்லுபடியாகாது எனவும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆண்ட்ரி ரஜோலினா பதவி விலக மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.