
மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பாலம்
திட்வாசூறாவளியினால் பாதிக்கப்பட்ட கண்டி – பதுளை ரஜ மாவத்தையில் பெலிஉல் ஒய பாலத்திற்காக நிருமாணிக்கப்பட்ட பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தொஷ் ஜா மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன ஆகியோர் தலைமையில் அண்மையில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.
டிக்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டின் மறுகட்டமைப்புக்காக இந்திய அரச மற்றும் மக்கள் வழங்கிய “சாகர் பந்து” நடவடிக்கையின் கீழ் இந்த தற்காலிக பெய்லி பாலம் நிறுவப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் இந்திய இராணுவப் பொறியாளர் படையினரால் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்டது.
இதற்கு இணையாக ராஜ மாவத்தையில் சேதமடைந்த கோஹோம்பகானா பாலத்தில் இந்திய உதவியுடன் பெய்லி பாலம் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாலம் நிறுவப்பட்டவுடன், ரஜ மாவத்தை போக்குவரத்துக்கு முழுமையாகத் திறக்கப்படும்.
இந்த நிகழ்வில் பேசிய இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சேதமடைந்த நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை மறுகட்டமைப்பதற்கும் இந்திய அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து உதவி வழங்குவார்கள் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்ன உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
