
மக்களை ஏமாற்றி வசூலித்த பணத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார் வாங்கிய தீர்க்கதரிசி!
டிசம்பர் 25 அன்று உலகம் வெள்ளத்தால் அழிக்கப்படும் என்று கூறிய கானா நாட்டைச் சேர்ந்த தீர்க்கதரிசி பேரழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னை தானே ஒரு தீர்க்கதரிசி என சொல்லிக்கொள்ளும் எபோ நோவாஇ தனது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவிசாய்த்து மறு அறிவிப்பு வரும் வரை பேரழிவை தள்ளி வைத்துள்ளதாக தன்னை பின்தொடரும் தனது சீடர்களிடம் தெரிவித்தார்
அவரது தீர்க்கதரிசனத்தை நம்பிஇ நோவாவின் பேழை போன்ற பேழைகளைக் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கிய ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளைப் பயன்படுத்தி அவர் ஒரு புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் காரை வாங்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது இந்த செயற்பாடு அவரது விசுவாசிகள் மத்தியின் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. கடவுள் அழிவை தள்ளி வைத்துவிட்டார் என்றார் இனி அடுத்தாக என்ன நடக்கும் என்று அவரது விசுவாசிகள் அவரிடம் கேs;tp எழுப்பியுள்ளதாக me;ehl;L செய்திகள் தெரிவிக்கின்றன.
