மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் 6 நூல்களின் வெளியீட்டு விழா!
-மட்டக்களப்பு நிருபர்-
மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் ‘இதிகா- (நாவல்) பாகம் – I .மற்றும் பாகம்- II, ‘எதிரொலி’ (சிறுகதை), ‘வின்னிமண்டேலாவின் வாக்கு மூலம்’- (வரலாறு), ‘இது புதிய ஆரம்பம்’- (நாவல்), “Hurdles”- (short story) ஆகிய ஆறு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் அரங்கேறவுள்ளது.
பேராசிரியர் பால சுகுமார் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பிரதம விருந்தினராகவும், பேராசிரியர் றமீஸ் அப்துல்லா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது, வெளியீடு செய்யப்பட்ட நூல்களுக்கான அறிமுகவுரைகளை ‘இதிகா- 1’ மற்றும் ‘இதிகா- 2’ – எழுத்தாளர் ச.மணிசேகரனும், ‘எதிரொலி’- (சிறுகதை)- கவிஞர் கதிரவன் த.இன்பராசாவும், ‘வின்னிமண்டேலாவின் வாக்குமூலம்’- (வரலாறு)- பேராசிரியர் செ.யோகராசாவும், ‘இது புதிய ஆரம்பம்’- (நாவல்)- கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசனும், “Hurdles”- (short story)- எழுத்தாளர் அ.ச.பாய்வாவும் நிகழ்த்தினர்.
அத்தோடு சிறுகதை மஞ்சரி சஞ்சிகைக்கான சந்தாப் பணமான 1000/- செலுத்துவோருக்கு இவ் 6 நூல்களும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்