மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த இளம் தந்தை உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில், மகளை தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சித்த தந்தை ஒருவர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஊரெழு கிழக்கு ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திங்கட்கிழமை காலை மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார்.

இதன்போது அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு வந்து கதிரையில் இருந்தவேளை மயக்கடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார், இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாலை உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சடலம் மீது உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்