மகன் இரும்பு கம்பியால் தாக்கியதில் தந்தை பலி
மாத்தளை, கலேவெல, மகுலுகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மகன் தனது தந்தையை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கி இன்று செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்துள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
மகுலுகஸ்வெவ, 04ஆவது மைல்கல் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 32 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மகுலுகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்